தமிழ்க் கதைகள் நமக்கு மிகச் சிறப்பாக எதைத் தரும்?

ஞாயிறு, 22 நவம்பர், 2020

NEET UG 2020 GOT BENEFIT OCCASIONALLY TO ACHIVE THE 7.5% Concession

 அன்பு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் காலை வணக்கம்....

🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐


மனதைக் கவர்ந்த வாழ்க்கைக்கு பயன்படும் அதுவும் ஏழை எளியோருக்கு அரசு பள்ளிகளில் கல்வி பயில்வதற்கு கிடைத்த வெகுமதி யின் சான்று..

என்னுடைய மகள்கள் இருவர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாநில கல்வி பயின்று எம்பிபிஎஸ்.,எம் டி., 

பி எஸ் எம் எஸ்‌, எம் டி., என சிறப்பாக கல்வி பயின்று  சாதனை படைத்துள்ளனர்..

 எனவே எனக்குள் மருத்துவத்துறை சார்ந்த மாணவர் சேர்க்கை விஷயத்தை மகிழ்ச்சி அளித்தது என்பதை விளக்கும் முகமாக பதிவிட்டுள்ளேன்

மருத்துவர் திரு சுதாகர் அவர்கள் தமக்கு பயன் கிடைத்த விவரத்தை கீழே குறிப்பிட்டுள்ளார்

எனது மனைவி இந்த கல்வி ஆண்டில் NEET UG 2020  தேர்வில் தேர்ச்சி பெற்று தனது 33 ஆண்டு வயதில் மருத்துவராக பட்ட படிப்பில் சேர்ந்தார்....

இவர் 2005 ஆம் ஆண்டு +2 அரசு மேல்நிலைப்பள்ளி குருவரெட்டியூர் பயின்று பின்னர் Diploma Nursing 2006 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . பிறகு அரசு பணியில் சேர்ந்தார் .

எங்கள் திருமணத்திற்கு பிறகு அரசு பணியில் இருந்து விலகி இருந்தார். நான் சென்னையில்  MMC ல் MS ortho  பட்ட  மேற்படிப்புபெற்ற போது 2015 அவரும் MMC ல் Post Basic B.Sc Nursing ல் அரசு இட ஒதுக்கீட்டில் பயின்று பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் . தற்போது எங்களின் இரண்டாம் குழந்தைகளுக்கு 8 மாதம் ஆன நிலையில் இந்த வருடம் NEET UG வீட்டில் இருந்து படித்து தேர்ச்சி பெற்றார் . தற்போது தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் நேற்று UG counseling பங்கு பெற்று சேலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் MBBS சீட் எடுத்து  உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை.....

வழிகாட்டுதல் மட்டுமே அவசியம் . நன்றி.

🙏🙏🙏🙏🙏

மரு. R. சுதாகர் MBBS DCCH MS orthopedician

Asst Professor

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி.


Depression explained in Sourashtra language.