தமிழ்க் கதைகள் நமக்கு மிகச் சிறப்பாக எதைத் தரும்?

புதன், 20 மே, 2015

SSLC EXAM RESULT TODAY GREETINGS TO STUDENTS

எனதன்பு மாணக்கச் செல்வங்களே!...
உற்சாகமான வாழ்த்துக்களுடன்.
இன்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையைப் பெறுகின்ற மாணவச் செல்வங்கள் அனைருக்கும் அன்பு வாழ்த்துக்களுடன்... ஓர் விண்ணப்பம்.. ஆம் அன்னையை வணங்கு..




அன்னையை வணங்கி அன்றைய பணியைத் துவங்கிடு!
ஆர்வமிகுதி அப்போதே காணப்பெறுவாய் இதுநம்பு!!
இல்லைஇனி தடைகள் என்றே இனிமையாய் உணர்வாய்!
ஈடில்ல வரமொன்று வேண்டுமென அன்னையிடம் வேண்டிடு!

உயர்வுகள் தேடிவர உபாயம் ஒன்று சொல்லக்கேளு!
ஊரில்ஏன் உலகத்தில் உனக்கொரு உன்னத வழியொன்று!
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறையருள்கூட அன்னையருளே!
ஏற்றம்பெற்ற பின் அன்னையை மறந்திடாதி ருந்திடுக!

ஐவகை இயற்கையும் ஓர்வகையில் அன்னையில் மருவுருவே!
ஒலியுடன் ஓளியும் இணைவது போல் வளமும் சுகமு்ம் பெற்றிடு
ஓசையின்றி உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும் - உன்வழி
ஓளவைப் பாட்டி காட்டிய நல்வழியாகட்டும் - ரெங்கன் தமிழாசிரியர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக