வருக.. வருக.. ஆங்கிலப் புத்தாண்டே வருக!..
வருகை தரும் ஆண்டை எண்ணால் 2016 என்றாலும்
வளமான இவ்வாண்டு எங்கள் திருவள்ளுவராண்டு
வாஞ்சைமிகு 2048 ல் வருவது நன்று என்போமே..
எண்ணிய எண்ணம் நன்றாய் ஈடேறும் என்று
எண்ணங்களில் விதைத்திடுவோம் நம்பிக்கையாக
உண்மையில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில்
உணர்வுகள் எண்ணிப்பார்த்தால் எந்நாளும் இன்பமே!
காலையில் எழும் நேரம் கடிகாரம் மணி எட்டு என்றால்
கனவிலும் எதிர்காலம் சிறக்காது என்றிடுவோம்
காலையில் எழுவது வைகறை பொழுதானால்
கணக்காய் வழிகிட்டிடும் உயர்விற்கு என்றே!
இவ்வாண்டில் ஒருகுறையைப் போக்கிடுவோம்
இன்றே முழுதாய் சபதமேற்போம்..நாளை விடிந்தால்
இனிய 2016.. பொழுது புலரும்.. இனி இவ்வாண்டு
இனிக்க இனிக்க எழுவோம் நாளும் ஐந்தரைக்கே..
எல்லோரும் நலமென்று கைகொட்டி வரவேற்போம்.
எல்லோரும் நலமாய் உயர்ந்திட அருள் பெற்றிடுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக