தமிழ்க் கதைகள் நமக்கு மிகச் சிறப்பாக எதைத் தரும்?

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

1192 ஹேமலம்ப ளு ஆடி மீ 22உ (07-08-2017 திங்கட்கிமை  இரவு 10-50 முதல் 12-44 வரை சந்திர கிரகணம்...
ஆகஸ்ட் 7ம் தேதி சந்த்ர க்ரஹணம். இந்த க்ரஹணம் திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றும் மகர ராசியை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. "த்ரிஷட்டஸாயோபகதே நராணாம் ஸுபப்ரதம் ஸ்யாத்க்ரஹணம் ரவீந்த்வோ: த்விஸப்த ஸந்தேஷு *ச* மத்யமம் ஸ்யாச்சேஷேஷ்வ நிஷ்டம் முனயோ வதந்தி" என்பதால் ஜன்ம ராசியிலிருந்து 3, 6, 10, 11 ஸ்தானங்களில் க்ரஹணம் ஸம்பவித்தால் அது சுபம். 2, 7, 9 ராசிகளுக்கு மத்யம பலன். 1, 4, 5, 8, 12ல் அசுபம் என்று மஹரிஷிகள் தெரியபடுத்துகிறார்கள். அதனால் மஹரிஷிகளின் வாக்கின்படி *மிதுனம்., கன்னி., துலாம்*., கும்பம் ராசிக்காரர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பல்வேறு ராசிகளின் பலன்கள்.
மேஷம் – சுகம்.,
ரிஷபம் – மானக்கேடு.,
மிதுனம் – மரணபயம்.,
கடகம் – பெண்களினால் கஷ்டம்.,
சிம்மம் – ஸௌக்கியம்.,
கன்னி – கவலை., துலாம் – சரீர உபாதை.,
விருச்சிகம் – தனலாபம்.,
தனுசு – காயம்.,
மகரம் – மூளையதிர்ச்சி.,
கும்பம் – கேடு.,
மீனம் – லாபம்.
மேலே கூறிய பலன்கள் 6 மாதங்களில் ஏற்படும்.
2) என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.? க்ரஹண சாந்திக்கு ஜோதிட., தர்மசாஸ்திர நூல்கள் மூன்று வகையான சாந்திகளை பரிந்துரைக்கின்றன. அவை....
a) பிம்ப தானம்
b) மந்த்ர ஸ்நானம்
c) ஓஷதி ஸ்நானம். இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம்.
3) க்ரஹண நாளன்று செய்யக் கூடியவை என்ன.? செய்யக்கூடாதவை என்ன.?
இரவில் க்ரஹணம் ஏற்படுவதால் முன்னால் மூன்று ஜாமங்கள் (சுமார் 7.1/2 மணி) க்ரஹணத்தின் தாக்கம் இருக்கும். அதனால் மதியத்திலிருந்து க்ரஹணத்தின் தாக்கம் இருப்பதால் அதற்குள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் வயதானவர்கள்., வியாதியஸ்தர்கள், கர்ப்பிணி பெண்கள்., குழந்தைகள் மாலை வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவர்களும் எதுவும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் இரவு 08.00 மணி வரை ஏதாவது ஸாத்வீகமான பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம்.
4) இரவு 12.48மணிக்கு மோக்ஷானந்தரம் மோக்ஷ ஸ்நானத்தை ஆசரித்து எல்லோரும் மிதமான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
5) க்ரஹண சமயத்தில் தூங்கினால் வியாதியும்., மூத்ர விஸர்ஜனம் செய்தால் தரித்திரமும்., மல விஸர்ஜனம் செய்தால் கிருமி வியாதியும்., உடல் உறவு மூலம் பன்றி பிறப்பும்., ஸ்நானம் மூலம் குஷ்டரோகமும்., சாப்பிடுவதன் மூலம் நரகமும் கிடைக்குமென்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன.
6) க்ரஹணத்திற்கு முன் சமைத்தவை பின்னர் உபயோகப்படாதா.? க்ரஹணத்திற்கு முன் சமைத்தவை க்ரஹணம் முடிந்த பிறகு சாப்பிடக்கூடாது. ஆனார் இதில் சில விலக்குககள் உள்ளன. கஞ்சி., மோர்., நெய்., பால் இவற்றிற்கும் மற்றும் இவற்றை கொண்டு சமைத்த பதார்த்தங்களுக்கும் தோஷம் இல்லை. ஆனால் "குஸாந்தராளம் குர்வீத" என்பதிற்கேற்ப அவற்றில் தர்ப்பைகள் போட்டிருக்க வேண்டும்.
7) க்ரஹண சமயத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே.? "ஸ்வஸ்வேஷ்ட தேவதா மந்த்ர ஜபம் குர்யாத் ப்ரயத்னத: யதாசக்தி ஜபேத்தேவீம் காயத்ரீம் ப்ரயதஸ்ஸதா சந்த்ர ஸூர்யோபராகேது மாலின்யமபாத் பவேத்" என்று புராண., தாந்த்ரீக வசனங்களின்படி க்ரஹண சமயத்தில் இஷ்ட தேவதா மந்த்ர ஜபம் செய்யவில்லை என்றால் மந்திரம் சக்தியற்று போய்விடும் என்று கூறியுள்ளபடியால் குருமுகமாக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். எந்த மந்திரமும் தெரியாதவர்கள் உபநயனமாகி இருந்தால் காயத்ரி மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். மற்றவர்கள் பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
8) இந்த க்ரஹணத்திற்கு வேறு ஏதாவது விசேஷம் உண்டா.? இருக்கிறது. சந்த்ர க்ரஹணம் திங்கட்கிழமை அன்று ஏற்பட்டால் அதற்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர். இதைப் பற்றி சாஸ்திரம் "வர்ஷேஷன்வேஷு யத்புண்யம் க்ரஹணே சந்த்ர ஸூர்யயோ: தத்புண்யம் கோடிகுணிதம் க்ராஸே சூடாமணௌ ஸ்ம்ருதம்" சாதாரண சந்த்ர க்ரஹணத்தை விட இந்த சூடாமணி க்ரஹணம் ஸ்நானம்., தானம்., ஜபம்., ஹோமம் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான பலனை தந்தருளும் என்பது வியாஸ மஹரிஷியின் வாக்கு.

புதன், 31 மே, 2017

🌼சந்திர  பலம்  உள்ள  நாட்கள்🌼

தேடினாலும் எளிதில்  கிட்டா பதிவு

🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

🌼மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.🌼

ஞாயிறு, 26 மார்ச், 2017

தமிழாசிரியர் பணி ஓய்வு 31-03-2017

அன்புடையீர்,
வணக்கம்..
வருகிற 01-04-2017 முதல் தமிழ்ப் பணியில் அதிக அக்கரையுடன் நுழைய உள்ள எங்களுககு தக்க ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துக்களையும் நல்கிட சான்றோர்களை விரும்பி கேட்டுக் கொள்கிறோம். .
பணிவு கலந்த வணக்கங்களுடன்,
நா. ரெங்கன்..
உஷா 
ஜோதிட தம்பதி